---விளம்பரம்-----

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம்: வெங்கி அட்லூரியின் குடும்ப நாடகம்

ஆகஸ்ட் 15, 2026 11:25 காலை
vishwanath & sons
---விளம்பரம்-----
Make us Preferred Source on Google
Link copied!
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்துல வெளிவந்திருக்கிற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தைப் பத்தி பார்க்கப் போறோம்.

படத்தின் கதைக்களம்

படத்துடைய கதையைப் பத்திப் பார்த்தோம்னா:

  • படத்துடைய ஹீரோ மிகப்பெரிய ஒரு தொழிலதிபர், பெரிய பணக்காரர். அடிக்கடி வெளிநாட்டுக்குப் போயிட்டு வரக்கூடியவர்.
  • அவருக்கு 40 வயசுக்கு மேலாகியும் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்காரு அப்படிங்கிறது அவங்க அம்மாவுடைய மிகப்பெரிய கவலையா இருக்கும்.
  • இதுக்கு இடையில, அவரு ஒரு நாள் அமெரிக்காவுல இருந்து திரும்பி வரும்போது ஒரு கைக்குழந்தையோட வராரு. எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், "இந்தக் குழந்தை யாரு?" அப்படின்னு சொல்லிட்டு.
  • அந்த குழந்தை அவருடைய குழந்தைதான். அவரு அமெரிக்காவுல ஒரு வாடகைத்தாய் மூலமா அந்த குழந்தையைப் பெற்றிருக்காரு.
  • இங்க இந்தியாவுல கொண்டு வந்து தன்னுடைய வீட்ல வளர்க்கும்போது, அந்த குழந்தைக்கு ஒரு நோய் வந்துரும்.
  • இந்த நோயைச் சரி பண்ணனும்னா, இந்தக் குழந்தையுடைய சொந்த அம்மா வந்தாதான் சரி பண்ண முடியும் அப்படின்னு டாக்டர்ஸ் எல்லாம் சொல்லிடுவாங்க.
  • இப்ப மறுபடியும் புறப்பட்டு அமெரிக்காவுக்குப் போயிட்டு, அந்த வாடகைத்தாய் யாருன்னு இவருக்கே தெரியாது, அவங்களைத் தேடிப் போகும்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் தெரியுது—இவரோட 20 வயசு கம்மியான மமிதா பைஜூ தான் அந்த அம்மா அப்படின்னு தெரியவருது.
  • அவங்ககிட்ட போய் விஷயத்தைச் சொல்லி, "நீங்க உடனே புறப்பட்டு இந்தியாவுக்கு வரணும்"னு சொல்லும்போது, "ஒரு பெரிய தொகையைக் கொடுத்தாதான் நான் வருவேன்" அப்படின்னு அவங்க சொல்றாங்க. அதுக்கெல்லாம் அவரு ஒத்துக்கிட்டு அவங்களைக் கூட்டிட்டு வராரு.
  • அவங்க இங்க வந்த பிறகு என்னென்ன மாற்றங்கள் இவங்க வாழ்க்கையில ஏற்பட்டுச்சு அப்படிங்கிறதுதான் இந்தப் படத்துடைய கதை.

திரைக்கதை & காட்சிகள் பற்றிய விமர்சனம்

இந்தப் படத்துடைய கதையைக் கேட்டவுடனே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், இது ஒரு வழக்கமான ஃபார்முலா கதைதான். ஆரம்பத்தைக் கேட்கும்போதே உங்களுக்கு முடிவு வரைக்கும் தெரிஞ்சிருக்கும். இது ஒரு மினிமம் கேரண்டியான கதை. இதுக்கான ஒரு சுமாரான திரைக்கதையைப் பண்ணிட்டாலே படம் தப்பிச்சுடும்.

ஒரு நல்ல திரைக்கதை அப்படிங்கிறது, அந்தப் படத்துல வரக்கூடிய ஏதாவது ஒரு சீனை கட் பண்ணிட்டா, படம் முழுக்க அந்த ஜம்ப் (குறைபாடு) தெரியணும். ஆனா இதுல நிறைய நல்ல சீன்கள் வருது, எதை கட் பண்ணாலும் படத்துல எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது:

  • ஃபர்ஸ்ட் இவரை ஒரு துப்பாக்கி சுடுற வீரரா காட்டுவாங்க. அந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும், ஆனா அதை படத்துல இருந்து வெட்டி எடுத்துட்டா எந்த ஒரு ஜம்புமே தெரியாது.
  • ஜார்ஜ் மரியான் கூட ஒரு அருமையான சீன் இருக்கும்; அதையும் வெட்டி எடுத்துட்டீங்கன்னா கதையில எங்கேயுமே ஜம்ப் தெரியாது.
  • ஒரு 5-ஸ்டார் ஹோட்டல்ல ஃபைட் சீன் இருக்கும். அதை அப்படியே தூக்கிட்டாலும் படத்துல எந்த மாற்றமும் இருக்காது.

குறைகளும் பலவீனங்களும்

  • மையக்கதாபாத்திரம் தவறவிடப்பட்டது: கதையின் மையக் கதாபாத்திரம் அந்தக் குழந்தைதான். ஹீரோ, ஹீரோயின் மற்றும் குழந்தை—இந்த மூணு பேருக்குள்ள நடக்கிற கதையாத்தான் இது இருந்திருக்கணும். ஆனா அந்தக் குழந்தையை ஒரு ஜடப்பொருள் மாதிரிதான் கையாண்டிருக்காங்க. குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா வீட்ல கார் ரிப்பேர் ஆன மாதிரி பேசுறாங்களே தவிர, எந்தப் பெற்றோரின் உணர்வும் இல்லை.
  • காணாமல் போகும் கதாபாத்திரங்கள்: ஃபர்ஸ்ட் ஆஃப்ல அரை மணி நேரம் குழந்தையே வராது; செகண்ட் ஆஃப்ல மமிதா பைஜூ கேரக்டரே அரை மணி நேரம் காணாமப் போயிடும். ஹீரோ போயிட்டு மாப்பிள்ளையோட பெரியப்பாவையும், சித்தியோட அப்பா-அம்மாவையும் கன்வின்ஸ் பண்ணிட்டு இருப்பாரு.
  • சீரியல் போன்ற மேக்கிங்: படத்தை பிரம்மாண்டமா காட்டுறேன்னு சொல்லி ரொம்ப அந்நியமான ஏரியாவா காட்டிட்டாங்க. ஹிந்தி சீரியல் மாதிரி தூங்கி எழுந்தா கூட லிப்ஸ்டிக், வேலைக்காரி கூட ஜரிகை வேலைப்பாடு டிரஸ் போட்டு வர்ற மாதிரி கிளாஸா காட்ட முயற்சி பண்ணியிருக்காங்க.

முடிவுரை

துப்பாக்கி எடுத்து சுடுறது, அருவாளை எடுத்து வெட்டுறது, போதைப்பொருள் விக்கிறது இல்லாம ஒரு குடும்பப்பாங்கான படத்தைக் கொடுத்திருக்காங்க. ஒரு குழந்தை, அப்பா-அம்மா பாசப் போராட்டமா இதைச் சரியா பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும். அதை விட்டுட்டு ஹீரோயிசத்துக்கும் ஹிந்தி சீரியல் பாணிக்கும் முக்கியத்துவம் கொடுத்துட்டாங்க.

IMDB: Vishwanath & Sons

GK Mint Desk

துல்லியமான, நம்பகமான செய்திகள், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் பார்வைகள் மூலம் வாசகர்களை தகவலறிந்த முடிவுகளை எடுக்க வலுப்படுத்துகிறோம். நம்பகமான பத்திரிகைத்துறையை வழங்குவதிலும், விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதிலும், ஒவ்வொரு நாளும் முக்கியமான செய்திகள் மற்றும் ஆழமான தகவல்களுடன் எங்கள் வாசகர்களை தொடர்ந்து இணைத்திருக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

வாட்ஸ்அப்

இணையுங்கள்

டெலிகிராம்

இணையுங்கள்

Leave a Comment